மாணவிக்கு பாலியல் தொல்லை.. - போலீசார் கண்முன்னே விரட்டி விரட்டி வெளுக்கப்பட்ட ஆசிரியர்

x

ஆந்திராவில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் காரம்புடி நகரில், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் ரவிக்குமார் என்பவர், அதே பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் பள்ளிக்குச் சென்ற பெற்றோர் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர் ரவிக்குமாரை தாக்கினர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போதிலும், தாக்குதல் தொடர்ந்தது. இதையடுத்து, ஆசிரியரை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்