2 ATM-களை கொள்ளையடிக்க மூகமூடி கும்பல் எடுத்து வந்த பொருள்..பறந்த தீப்பொறி..
2 ATM-களை கொள்ளையடிக்க மூகமூடி கும்பல் எடுத்து வந்த பொருள்..பறந்த தீப்பொறி.. கையில் வந்த 26 லட்சம் - மிரளவிடும் சிசிடிவி
ஆந்திராவில், கேஸ் கட்டர் மூலம் 2 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து திறந்த முகமூடி கொள்ளையர்கள் அதிலிருந்த 26 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். சித்தூர் மாவட்டம், குடிபாலாவில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 2 ஏடிஎம் மையங்களுக்குள் அடுத்தடுத்து புகுந்த முகமூடி கொள்ளையர்கள், கேஸ் கட்டர் மூலம் இயந்திரங்களை உடைத்து திறந்தனர். பின்னர், அதிலிருந்து 26 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story