இரு மாநிலங்களை இணைக்கும் சாலையில் நிலச்சரிவு.. சாலையில் சிதறி கிடக்கும் பாறைகள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ள பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நிலசரிவு ஏற்பட்டது. ஸ்ரீசைலம் அணையின் அடிபாகத்தில் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் சரிந்து தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் சாலையில் விழுந்தன. அப்போது அந்த சாலையில் போக்குவரத்து இல்லாதததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாறைகள், மண் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள், தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story