அசால்ட்டா வந்தவருக்கு எமனை கண் முன் காட்டிய வெள்ளம் - வெளியான அதிர்ச்சி காட்சி

x

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள வெங்கடய்யாபாலம் என்ற கிராமத்தில், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள தரைப்பாலம் வழியாக வெள்ளம் ஓடுவதால், கயிற்றை கட்டி மக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது அலட்சியமாக ஒற்றைக் கையால் கயிற்றை பிடித்து கடக்க முயன்ற நபரை, வெள்ளம் இழுத்துச் சென்றது. அருகிலுள்ள மரக்கிளையை பிடித்துக் கொண்ட அவரை, பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்