காதலியை பார்க்க ஹாஸ்டலுக்குள் புர்கா போட்டு நுழைந்த காதலன்.. நடையை பார்த்தே வெளுத்த செக்யூரிட்டி

x

காதலியை சந்திக்க புர்கா அணிந்து மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த காதலன் கையும் களவுமாக பிடிபட்டார்...ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி 2ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். திருச்சூரை சேர்ந்த சமையல் மாஸ்டர் ஒருவரும் அந்த மாணவியும் காதலித்து வந்த நிலையில், பெங்களூரில் சமையல் வேலை செய்து வரும் அந்தக் காதலன் தனது காதலியை சந்திக்க புர்கா அணிந்து கொண்டு நேரே விடுதிக்குள் செல்ல முயன்றார்... என்னதான் புர்கா அணிந்திருந்தாலும்... நடந்து சென்ற பாணி அவரை ஆண் என காட்டிக் கொடுத்து விடவே... விடுதி பாதுகாவலருக்கு சந்தேகம் வந்து தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்... முதலில் நடை... இப்போது குரலும் சேர்ந்து சமையல் மாஸ்டரை தோலுரித்துக் காட்டி விட்டது. பாதுகாவலர் அதிர்ச்சி அடைந்து அவரை பிடிக்க முயன்ற நிலையில் அவர் ஒரே ஓட்டமாக ஓடி விடுதிக்குள் ஒளிந்து கொன்டார்... அவரை விரட்டிப் பிடித்து தனியறையில் அடைத்து வைத்த பாதுகாவலர் போலீசுக்குத் தகவல் அளித்த நிலையில் போலீசார் சமையல் மாஸ்டர் காதலனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்