ஆந்திரா வைக்கும் செக்.. பொங்கி எழும் தமிழக அமைச்சர்.. Andhra Pradesh | Tamilnadu
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1892ம் ஆண்டு மதராஸ் - மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில், பாலாறும் ஒன்று என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது என கூறியுள்ளார். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்த வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக நிதி ஒதுக்கியிருப்பதும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு என தெரிவித்துள்ளார்.இந்த செயல் கூட்டாட்சிக்கு எதிரானது என்று கூறியுள்ள துரைமுருகன், இருமாநிலங்களின் நலன் கருதி, ஆந்திர அரசு அணை கட்டும் முயற்சிகளை மேற்கொள்ள கூடாது வலியுறுத்தியுள்ளார்