குளத்தில் மூளை உண்ணும் அரக்கன்.. ஜாலி குளியலால் துடித்து நின்ற மூச்சு.. மரண வாசலில் அடுத்த 4 பேர்
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குளத்தில் குளித்த இளைஞர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். மேலும், அதே குளத்தில் குளித்த நான்கு பேர் இதே போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட பரிசோதனையில் அவர்களில் ஒருவருக்கு அமீபிக் என்செபாலிடிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூவரின் பரிசோதனையில் மூவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
Next Story