அவசரமாக ஓவர் டேக் செய்த ஆம்புலன்ஸ் மடக்கி பிடித்து கொடூரமாக தாக்கிய ஓட்டுநர்...
பெங்களூருவில் ஓவர் டேக் செய்து அவசரமாக சென்ற ஆம்புலன்சை, இளைஞர் ஒருவர் மடக்கி ஓட்டுநரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலமங்களா பகுதியில் 3 மாத கைக்குழந்தை மற்றும் தாயை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவனை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. கார் ஒன்றை ஓவர் டேக் செய்து வேகமாக சென்றதால், காரில் இருந்த இளைஞர், மடக்கி குறுக்கே நிறுத்தி, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ பரவி வரும் நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story