இந்தியாவில் ஏலியன்களா..? விரட்டி சென்ற ரஃபேல் - அதிர்ந்த மணிப்பூர்; பீதியில் பொதுமக்கள்
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பிர் திகேந்திரஜித் விமான நிலைய கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் நேற்று திடீரென அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று பறந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி விமான சேவை நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, மத்திய தொழில் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து அவசர அழைப்பு வந்தது. இந்நிலையில், வெள்ளை நிறத்தில் பறந்த மர்மப்பொருளை விமான நிறுவன ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் பார்த்ததாக கூறப்படுகிறது. அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்பது உறுதியானபின் இம்பால் விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. இதனிடையே, மர்மப் பொருளை கண்டுபிடிக்க இந்திய விமானப்படையின் 2 ரஃபேல் விமானங்கள் அனுப்பப்பட்டன. எனினும், மர்மப் பொருளை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.