13 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ராம்சரண் - தோனி கூட்டணி டோலிவுட்டில் என்ட்ரி ஆகிறாரா கேப்டன் கூல்..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, சமீபத்தில் பழைய ஸ்டைலில் நீண்ட தலைமுடி வளர்த்து ஸ்டைலாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்தியாவின் முன்னணி சிகையலங்கார நிபுணரான ஆலிம் ஹக்கீம் வடிவமைத்த இந்த ஹேர்ஸ்டைல் காரணமாக, தோனி சினிமாவில் நடிக்கப் போகிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்தது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண், சமீபத்தில் தோனியை நேரில் சந்தித்துள்ளார். ராம்சரண் - தோனி சந்தித்த புகைப்படத்தை தோனியின் நண்பர் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story