மீண்டும் புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் நிறுவனம்

x

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் இந்தியாவில் விரைவில் பெரிதாக ஏதோ நடக்க போகிறது என்று தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான அதானி பணப்பரிமாற்ற ஊழல் தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. பெர்முடா , மொரிஷஸ் நிதி நிறுவன கட்டமைப்புகள் மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கணக்கு தொடங்கியது உள்ளிட்டவற்றில் செபி தலைவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் அதற்கான ஆவணங்கள் என்று கூறி ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிவிட்டுள்ளது. கடந்த ஆண்டு அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையால் அதானி குழும பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்த நிலையில், இவ்வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு மாற்ற மறுத்து, இது தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்