திடீரென தீ பிடித்து எரிந்த ஏ.சி - உ.பி கனரா பேங்கில் உச்சகட்ட பதற்றம்..
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், வங்கி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், ஊழியர்கள் ஜன்னல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். ஹசரத்காஞ்ச் என்ற இடத்தில் உள்ள கனரா வங்கி கிளையின் முதல் தளத்தில் உள்ள ஏசியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஏசி கொளுந்துவிட்டு எரிந்ததால், வங்கியில் இருந்த 40 ஊழியர்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பத்திரமாக வெளியேறி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையின்ர, தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதுமில்லை. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story