சிங்கப்பூரில் அதிபரான தமிழர் - சீன வம்சாவளிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சிங்கப்பூரில் அதிபரான தமிழர் - சீன வம்சாவளிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூரில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான

தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் மற்றும் சீன

வம்சாவளியை சேர்ந்த கோக் சாங், டான் கின் லியான்

ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 70.4 சதவீத வாக்குகள் பெற்று தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றார். கோக் சாங்கிற்கு 15.7 சதவீத வாக்குகளும், டான் கின் லியானுக்கு 13.9 சதவீத வாக்குகளும் கிடைத்தன. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் தமது வெற்றி சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கை வாக்கெடுப்பு என தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அதிபரின் பொறுப்புகளை நிறைவேற்றுவது தமது கடமை என்றும் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் துணை பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்

என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்