கோவிலுக்கு தனியாக வந்த மனைவி... வாசலிலே வைத்து கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற காதல் கணவன்
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிவிடு கிராமத்தை சேர்ந்தவர் சத்யராணி. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராம்பாபு என்பவரை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில், ராம்பாபு வழிப்பறி போன்ற குற்றசம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ராம்பாபுவிடம் விவாகரத்து கேட்டு, அவரை பிரிந்த சத்யராணி, தனது தந்தை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். மனைவி விவாகரத்து கேட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த ராம்பாப்பு, சம்பவத்தன்று அருகில் உள்ள கோயிலுக்கு தனியாக வந்த மனைவியை கழுத்தறுத்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை, சத்யராணியின் தந்தைக்கு ராம்பாபுவே செல்போனில் தொடர்பு கொண்ட கூறிய நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.