ஆடையில்லாமல் புதருக்குள் கிடந்த பெண்... பக்கத்தில் சிறுவன் - பகீர் சம்பவம்

x

பெங்களூரு புறநகர் பகுதியான பாடராயனதொட்டியை சேர்ந்த முனிரத்னம்மா என்பவர், 5 வயது நிரம்பிய தனது தங்கை மகனுடன் நடைபயிற்சிக்கு சென்றார். இரவு வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடினர். பூதனஹள்ளியில் ஒரு புதரின் அருகில் காயங்களுடன் இருந்த சிறுவனை மீட்ட குடும்பத்தினர், முனிரத்னம்மாவை தேடி வந்தனர். மறுநாள் அதே பகுதியில் முனிரத்னம்மா சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக சோமசேகர் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து அவரை காலில் சுட்டு பிடித்தனர். காயமடைந்த சோமசேகர், பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்