அதி வேகமாக வந்த சிறுவன்.. ஒருவருக்கு நேர்ந்த சோகம்
காரைக்குடி அருகே உள்ள செஞ்சை பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் 12 மற்றும் 16 வயது உடைய இரு சிறுமியுடன் சிவகங்கை அருகே உள்ள ஒண்டிப்புலி தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சக்கந்தி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த
போது, எதிரே வந்த மனோகரனின் பைக்
மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மனோகரன் உயிரிழந்தார். அவருடன் சென்ற இரு சிறுமிகள், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பைக்கை ஓட்டி வந்த16 வயது சிறுவனும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரில்,16 வயது சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தை கொடுத்த வெளிநாட்டில் உள்ள சிறுவனின் தந்தை மற்றும் சிவகங்கையில் உள்ள தாயார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்