ராமரால் முடிவுக்கு வரும் 30 ஆண்டு சபதம்... கலையும் மூதாட்டியின் மவுன விரதம் - வியக்க வைக்கும் போராட்டம்..!
1992 டிசம்பர் 6 ம் தேதி ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி பிரச்சினையில் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 50 வயது ராம பக்தையான சரஸ்வதி தேவி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் வரை மவுன விரதம் இருப்பதாக சபதம் மேற்கொண்டார். இந்நிலையில், வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், தனது பல ஆண்டு கால கனவு நிறைவேற இருப்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக தான் கடைபிடித்து வரும் மவுன விரதத்தை ராம் ராம் என கூறி கலைக்க இருக்கிறார்... கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜார்கண்டில் இருந்து புறப்பட்டுள்ளார்... கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு அருந்தும் அவர், இருவேளை 1 தம்ளர் பால் அருந்துவதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார்... பல ஆண்டுகளாக மவுன விரதம் இருந்த சரஸ்வதி தேதி பிறகு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் பேசி வந்த நிலையில், கடந்த 2020ல் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு முற்றிலும் பேசுவதை நிறுத்தி விட்டார்... இவரை அனைவரும் மவுன மாதா என்றழைப்பது குறிப்பிடத்தக்கது.