புழக்கத்தில் இருந்த 93% ரூ.2000 நோட்டுகள் - ரிசர்வ் வங்கி புதிய தகவல்

x

புழக்கத்தில் இருந்த 93% ரூ.2000 நோட்டுகள் - ரிசர்வ் வங்கி புதிய தகவல்

2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெற தொடங்கியது முதல் தற்போது வரை 93 சதவீதம் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கடந்த மார்ச் 31 அன்று 3.62 லட்சம் கோடியாக குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. மே 19, அன்று 23.56 லட்சம் கோடியாகவும், ஆகஸ்ட் 31, 2023 வரை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 23.32 லட்சம் கோடி என கூறப்பட்டுள்ளது. 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதில், சுமார் 87 சதவிகிதம் வைப்புத் தொகையாகவும், மீதமுள்ள 13 சதவிகிதம் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்