72 லட்சம் வாட்ஸ்-அப் கணக்குகள் தடை

x

அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 72 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்-அப் தடை செய்துள்ளது.இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் கடுமையாக உயர்ந்து, பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளன. பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்டு நிகழ்வதாக தெரிகிறது. இந்நிலையில். கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் இந்தியாவில் 72 லட்சத்து 28 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் தடை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆன்லைன் மோசடி புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. சுமார் 3 லட்சம் கணக்குகள் பயனர்கள் புகாரளிப்பதற்கு முன்பே தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்