63 வயது மூதாட்டியை சீரழித்த வாலிபருக்கு சாவுக்கு நிகரான தண்டனை

x

63வ யது மூதாட்டி பாலியல் வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம், 63 வயது மூதாட்டியிடம் செல்போன் மற்றும் நகைகளை பறித்து கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்த, சிலம்பரசன் என்ற 25 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 63 வயது மூதாட்டியை பாலியல் செய்த 25 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்தாண்டு ஜனவரி மாதம் புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி வயலில் வேலை செய்து கொண்டிருந்தப்பொழுது, கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (25) என்ற வாலிபர் மூதாட்டியை கடுமையாக தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு கொடூரமாக பாலியல் பாலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அளித்த புகாரின்பேரில் பாகூர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்ல வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்த குற்றவாளி சிலம்பரசுனுக்கு

ஆயுள் தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்