"ஷாக் கொடுத்த உ.பி, குஜராத், பிகார் - மிரட்டி விட்ட அசாம், மே.வங்கம், சட்டீஸ்கர்..." தேர்தல் ஆணையம்

x

மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு நேற்று அமைதியாக நடைபெற்றது. இரவு 11.40 மணி நிலவரப்படி, தோராயமாக 64.40 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இறுதி வாக்குப்பதிவு நிலவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக, அசாமில் 81.61 வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 75.79 விழுக்காடு வாக்குகளும், கோவாவில் 75.20 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளது. சட்டீஸ்கரில் 71.06 விழுக்காடு, கர்நாடகாவில் 70.41 விழுக்காடு, டாமன் டையூ யூனியன் பிரதேசத்தில் 69.87 விழுக்காடு, மத்தியப் பிரதேசத்தில் 66.05 விழுக்காடு, மகாராஷ்டிராவில் 61.44 விழுக்காடு, குஜராத்தில் 58.98 விழுக்காடு, பிகாரில் 58.18 விழுக்காடு, உத்தரப்பிரதேசத்தில் 57.34 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்