"அரசு பணிகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு" - மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவு
அரசு பணிகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்
வனத்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாகவும் தற்சார்பு கொண்டவர்களாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெண்களின் வாக்குகளை குறிவைத்து பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே பெண்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ஆயிரத்து 250 ரூபாயை மத்திய பிரதேச மாநில அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story