அயோத்தி ராமர் கோயிலுக்கு சொத்துக்களை கொடுக்கும் இஸ்லாமியர் | Ayodhya Ramar Temple

அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வழங்க இஸ்லாமிய குடும்பம் முன் வந்துள்ளது.
x
அயோத்தியில் நடைபெற்று வரும் ராமர் கோயில் கட்டுமான பணிக்காக 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வழங்க இஸ்லாமிய குடும்பம் முன் வந்துள்ளது. வடமாநிலங்களில் இந்து மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில், உத்தரபிரதேசத்தில் வசித்து வரும் இஸ்லாமிய குடும்பத்தின் செயல், இரு சமூகத்தினருக்கும் ஒற்றுமையை பிரதிபலித்துள்ளது. முசாஃபர் பகுதியை சேர்ந்த முகமது சமர் காஸ்னியின் குடும்பத்தினர், அயோத்தியில் கட்டுப்பட்டு வரும் ராமர் கோயில் பணிக்காக 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தானமாக வழங்க முன் வந்துள்ளனர். கோயில் பணிக்காக கொடுக்கப்படும் சொத்து ஆவணங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து வழங்க உள்ளதாக முகமது சமர் காஸ்னி கூறியுள்ளார். சொத்தை விற்று கிடைக்கும் பணத்தை ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்கள், இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதற்காக தனது சொத்துக்களை ராமர் கோயிலுக்கு வழங்க முன்வந்துள்ளதாக முகமது கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்