"உள்ளூர் மொழியை ஊக்குவிக்க வேண்டும்" - பிரதமர் மோடி வலியுறுத்தல்

நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டுமென பிரதமர் மோடி கூறியுள்ளார்.
x
நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டுமென பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் உள்ள விக்யான் பவனில் பிரதமர் மோடி தலைமையில் முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாடு நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அரியானா, சத்தீஸ்கர், அசாம், மேகாலயா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்றனர். அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதி மன்றத்திலும் நீதிமன்ற நடைமுறைகள் ஆங்கிலத்தில் இருப்பதால் சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முதன்மை அங்கமாக நீதித்துறையில் ஈ -கோர்ட் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.சிறு நகரங்கள் முதல் கிராமங்கள் வரை டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறி வருவதாக குறிப்பிட்ட மோடி, நீதிபதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் டிஜிட்டல் இந்தியாவை முன்னெடுத்து செல்ல கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைமை நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து சிறையில் உள்ள கைதிகளை பிணையில் விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார். மாநில அரசுகள் மூலம் 75 பொருத்தமற்ற சட்டங்கள் மட்டுமே அழிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்