ஆம்வே நிறுவனத்தின் ரூ. 757 கோடி சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி

நேரடி விற்பனை நிறுவனங்கள், உறுப்பினர்களுக்கு அதிக அளவு கமிசன் அளிக்கும் பிரமிட் விற்பனை முறையில், பொருட்களை விற்பதற்கு 2021 டிசம்பரில் மத்திய அரசு தடை விதித்தது
x
நேரடி விற்பனை நிறுவனங்கள், உறுப்பினர்களுக்கு அதிக அளவு கமிசன் அளிக்கும் பிரமிட் விற்பனை முறையில், பொருட்களை விற்பதற்கு 2021 டிசம்பரில் மத்திய அரசு தடை விதித்தது. தடை செய்யப்பட்டுள்ள பிரமிட் முறையில் பொருட்களை அதிக விலைக்கு ஆம்வே இந்தியா நிறுவனம் விற்பனை செய்ததால், அதன் 757 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஆம்வே நிறுவனம் இந்தியாவில் 2002 முதல் 2021 வரை, 27 ஆயிரத்து 562 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, அதற்காக 7 ஆயிரத்து 588 கோடி ரூபாய் கமிஷன் தொகையை விநியோகஸ்தர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் வழங்கியுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. ஆம்வே நிறுவனம் 21.39 கோடி ரூபாய் பங்கு முதலீட்டை இந்தியாவில் 1996 முதல் 2021 வரை செய்துள்ளது. இதிலிருந்து ஈட்டிய லாபத்தின் மூலம் 2 ஆயிரத்த 859 கோடி ரூபாய் ஈவுத் தொகையாக முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்