வங்கிகளின் திடீர் அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவலை

விலைவாசி உயர்வு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
x
விலைவாசி உயர்வு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கியின் ஒரு ஆண்டு கால கடன்களுக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு 7.3 சதவீதமாகவும், மூன்று ஆண்டுகளுக்கு 7.4 சதவீதமாகவும் உயர்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஸ் (Axis) வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.05 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.05 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வீட்டு கடன்கள், வாகனக் கடன்கள் உள்ளிட்ட அனைத்து வகை வங்கி கடன்களுக்கு செலுத்த வேண்டிய மாதாந்தர தவணைத் தொகை அதிகரிக்க உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்