ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் - அரசு அறிவிப்பு!

பஞ்சாப்பில் ஜூலை முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
x
ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் - அரசு அறிவிப்பு!

பஞ்சாப்பில் ஜூலை முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் பஞ்சாப் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்து பேசி இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி இருந்தார். அதேபோல் இன்று முக்கிய அறிப்பை வெளியிட உள்ளதாக முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்திருந்தார். அதன்படி சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் திட்டத்தை பகவந்த் மான் அறிமுகப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து இலவச மின்சாரம் அறிவிப்பு பஞ்சாப் மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்