கோடிகளை கொட்டிக்கொடுத்த கோவிஷீல்டு... நம்பர் 1 கோடீஸ்வரரான பூனவல்லா!

சுகாதாரத்துறையில் உலகின் நம்பர் - 1 பணக்காரராக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா முன்னேறியுள்ளார்.
x
சுகாதாரத்துறையில் உலகின் நம்பர் - 1 பணக்காரராக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா முன்னேறியுள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்யும் பணியில் சீரம் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

 இந்நிலையில், ஹுருன் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட சுகாதாரத்துறையில் உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்தியாவின் நம்பர் 4 பணக்காரரான சீரம் நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் பூனவல்லா நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு, வெறும் 62 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்த சைரஸ் பூனவல்லா, கொரோனா தடுப்பூசி விற்பனையால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

அதாவது தற்போது அவருடைய சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 97 ஆயிரம் கோடி. குதிரை ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட குடும்பத்தில் பிறந்த சைரஸ் பூனவல்லா, கடந்த 1966 ஆம் ஆண்டு சீரம் நிறுவனத்தை நிறுவினார்.

அதன் பிறகு தட்டம்மை, போலியோ, காய்ச்சலுக்கான 150 கோடி தடுப்பூசிகளை தயாரித்து, உலகின் மிக பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமாக சீரம் இன்ஸ்டிடியூட் உருவெடுத்தது.

கடந்த ஓராண்டில் மட்டும் சைரஸ் பூனவல்லாவின் சொத்து மதிப்பு 41 சதவீதம் உயர்ந்துள்ளது. இவரை தவிர்த்து, டாப் -10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த சன் பார்மாவின் நிறுவனர் திலிப் சங்வி & குடும்பம் 5வது இடத்தை பிடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்