40% பேரிடம் ஆதார் இல்லை - வெளியான அதிர்ச்சி தகவல்!

சமீப காலம் வரை, அரசு அளிக்கும் உதவிகள், நலத்திட்டங்களை பெற, மேகாலயாவில் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், ஆதார் பதிவு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
x
மேகாலயாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் விகிதம் தற்போது 58.61 சதவீதமாகவும், நாகாலாந்தில் 59.29 சதவீதமாகவும் உள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.

சமீப காலம் வரை, அரசு அளிக்கும் உதவிகள், நலத்திட்டங்களை பெற, மேகாலயாவில் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், ஆதார் பதிவு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேகாலயாவில் ஆதார் அட்டை பெற்றவர்கள் விகிதம் 2016இல் வெறும் 3.6 சதவீதமாக இருந்து, 2020இல் 30.3 சதவீதமாகவும், 2022இல் 48.3 சதவீதமாகவும் அதிகரித்தது.

அரசின் நலத்திட்டங்களையும், உதவிகளையும் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்ட பின், தற்போது  மேகாலயாவில் ஆதார் அட்டை பெற்றவர்கள் விகிதம் 58.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2023இல் இதை 70 சதவீதமாக உயர்த்த, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மேகாலாயா அரசு கூறியுள்ளது.

நாகாலாந்தில், ஆதார் அட்டைக்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரங்களின் விளைவாக, ஆதார் பதிவு விகிதம் மிக குறைவாக இருந்து வருகிறது.

2017இல் நாகாலாந்தில் ஆதார் அட்டை பெற்றவர்கள் விகிதம் 55 சதவீதமாக இருந்து தற்போது 59.29 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கேரளா, பஞ்சாப், குஜராத், தெலங்கானா, கோவா, டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ஆதார் அட்டை பெற்றுள்ளவர்கள் விகிதம் 100 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்