புதிய வகை "ஓமிக்ரான் XE" கொரோனா - மத்திய அமைச்சர் ஆலோசனை

புதிய வகை "ஓமிக்ரான் XE" குறித்து இந்தியாவில் உள்ள தலைசிறந்த வல்லுனர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தியுள்ளார்.
x
புதிய வகை "ஓமிக்ரான் XE" குறித்து இந்தியாவில் உள்ள தலைசிறந்த வல்லுனர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையின் போது, நாட்டில் உள்ள தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் புதிய வகை கொரோனா குறித்து ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்