2 ஆண்டுகளுக்கு பின் 'உணவு வீதி' திறப்பு - ஒரே இடத்தில விதவிதமான உணவுகள்! - குவியும் மக்கள்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உணவு வீதி திறக்கப்பட்டுள்ளது, நோன்பு துறக்கும் இஸ்லாமியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உணவு வீதி திறக்கப்பட்டுள்ளது, நோன்பு துறக்கும் இஸ்லாமியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தொற்றால் நின்றுபோன உணவு வீதி, தற்போது மீண்டும் களைகட்டியுள்ளது. இப்தார் மாதமாக நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள், மாலை நோன்பு திறந்து உணவு உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஏதுவாக பல்வேறு வகையான உணவுகள், உணவு வீதியில் வைக்கப்பட்டுள்ளன. சிக்கன், மட்டன், கெபாப், ரோல்ஸ், தம் பிரியாணி, தால்சா கானா உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் ஒரே இடத்தில் கிடைப்பது, நோன்பு திறக்கும் இஸ்லாமியர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உணவக உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story