இரும்புப் பாலத்தை அலேக்காக தூக்கி சென்ற திருடர்கள்... திருட்டுக்கு துணைபோன அப்பாவி மக்கள்!

பீகார் மாநிலத்தில் 60 அடி நீள பாலத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
பீகார் மாநிலத்தில் 60 அடி நீள பாலத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

"இங்கிருந்த என் கிணத்தக் காணங்க" என்று வடிவேலு பட காமெடி போல், அதிகாரிகள் போல் வேடமிட்ட மர்ம கும்பல் பாலத்தையே அலேக்காக திருடிச் சென்றுள்ளனர். பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்திற்கு மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் போல் வேடமிட்டு வந்த மர்ம ஆசாமிகள், பாலத்தை அடியோடு அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். அதை அப்படியே அப்பாவித் தனமாக நம்பிய கிராம மக்கள் பாலத்தைத் திருட அவர்களும் உதவி புரிந்துள்ளனர். 45 ஆண்டுகள் பழழையான இந்த இரும்பு பாலம் உபயோகத்தில் இல்லாத நிலையில், புல்டவுசர்களோடு வந்த கொள்ளையர்கள் மக்களின் உதவியுடன் வெறும் மூன்றே நாட்களில் பாலத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டுக் கும்பலைத் தேடி வருகின்றனர். இதற்கு முன்பு அமெரிக்கா, உக்ரைன், செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் பாலங்கள் திருடு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்