ஆதாருடன் சாதி சான்றிதழ் இணைப்பு?

கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக விரைவில் ஆதார் கார்டுடன் சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதாருடன் சாதி சான்றிதழ் இணைப்பு?
x
கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக விரைவில் ஆதார் கார்டுடன் சாதி சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் சுமார் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கான உதவித்தொகை அவரவர்களுக்கு சென்று சேருகிறதா ? என்பதை உறுதி செய்ய ஆதார் கார்டுடன் சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை இணைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆதார் கார்டுடன் சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதனை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஒரே வங்கி கணக்கில் 10 முதல் 12 மாணவர்கள் பயனாளிகளாக இணைக்கப்பட்டிருப்பதால், உண்மையிலேயே உதவித்தொகை மாணவர்களுக்கு சென்று சேருகிறதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், உதவித்தொகை குறித்த பயன்களை மாணவர்கள் முழுமையாக அறிந்துள்ளார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே ஆதார் கார்டை இணைப்பதன் மூலம் மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றடைவதை உறுதி படுத்துவதோடு, என்ஜீனியரிங், மருத்துவம், நர்சிங் என மாணவர்களின் மேல் படிப்பிற்கு ஏற்ற வகையில், எந்த மாதம் அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும் என்ற தகவலையும் உறுதி செய்ய இந்த திட்டம் வழிவகை செய்யும். இந்த திட்டத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் உதவித்தொகை பெறுவதற்காக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதும் தடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்