பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது.
பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
x
பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்காக மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக,  இந்திய சட்டப் பணிகள் அதிகாரிகளாக உள்ளவர்களை நியமிக்கும் வகையில் 2016ம் ஆண்டு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் வசந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் போது எந்த சட்ட அனுபவமும் இல்லாதவர்களை நீதித்துறை உறுப்பினர்களாக நியமிக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.ஆனால், இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல் முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு அரசு அதிகாரியை நீதித்துறை உறுப்பினராக நியமிக்க வகைவகை செய்யும் சட்டத்திருத்தத்தை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து தீர்ப்பளித்தனர். மேலும் உச்ச நீதிமன்றம் 2011ல் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் புதிதாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்