தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டம் தடை கோரிய மனுக்கள் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு!

தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள், விரைந்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டம் தடை கோரிய மனுக்கள் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவிப்பு!
x
தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள், விரைந்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தடை கோரிய மனுக்கள் ஓராண்டுக்கும் மேலாக விசாரிக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தார். சுங்கத்துறையினரின் சோதனையை தவிர்க்கும் வகையில், 40  கோடி ரூபாய் தேர்தல் நிதி பத்திரத்தின் வாயிலாக செலுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது மக்களாட்சியை சிதைக்கும் வகையில் உள்ளதால், உடனடியாக விசாரிக்க வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்ற தலைமை நீதிபதி, மனுக்கள் விரைந்து விசாரிக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்