குத்தாட்டம் போட்டு நோயாளியை உற்சாகப்படுத்திய செவிலியர்கள் - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

நோயாளியை உற்சாகப் படுத்துவதற்காக மருத்துவமனை செவிலியர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x
நோயாளியை உற்சாகப் படுத்துவதற்காக மருத்துவமனை செவிலியர்கள் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தெலுங்கானா மாநிலம் சுல்தானாபாத்தை சேர்ந்த சீனிவாஸ், கல்லீரல் பிரச்சனை காரணமாக சில வாரங்களுக்கு முன் கரீம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அம்மருத்துவமனை செவிலியர்கள், தினமும் சீனிவாஸின் முன்னர் சினிமா பாடலுக்கு நடனமாடி, அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். சீனிவாஸின் உடல்நலன் தற்போது தேறி வரும் நிலையில், அவர் முன் செவிலியர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்