பெண்களுக்கு பாதுகாப்பிற்காக புதிய முயற்சி : 10,000 போலீசார் கொண்ட ஆன்டி ரோமியா படை!

உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 ஆயிரம் போலீசார் கொண்ட ஆன்டி ரோமியா படை அமைக்கப்பட்டுள்ளது.
x
பெண்களுக்கு பாதுகாப்பிற்காக புதிய முயற்சி : 10,000 போலீசார் கொண்ட ஆன்டி ரோமியா படை!

உத்தரபிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 ஆயிரம் போலீசார் கொண்ட ஆன்டி ரோமியா படை அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அதிரடிகளை காட்டி வருகிறார். அந்த வகையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பதற்கான இயக்கத்தை அமைத்துள்ளார். மிஷன் சக்தி என்ற பேரில் அமைக்கப்பட்டுள்ள ஆன்டி ரோமியோ படையில் பத்தாயிரம் போலீசார் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் மார்க்கெட் பகுதிகளில் வலம் வந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதுடன், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இந்த ஆன்டி ரோமியோ படை 100 நாட்கள் வரை மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வலம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியில் தொடங்கப்பட்ட ஆன்டி ரோமியோ படையின் முதல் நாளில் பெண் காவலர்கள் இருசக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டுமின்றி ஒவ்வொரு காவல்நிலையத்தில் முதல் பத்து இடங்களில் இருக்கும் குற்றவாளிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கவும், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்