கார்கள், 2 சக்கர வாகனங்கள் விலை உயர்வு - காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, மூலப்பொருட்கள் விலை, உற்பத்தி மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால்...
x
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, மூலப்பொருட்கள் விலை, உற்பத்தி மற்றும் சரக்கு போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டர் நிறுவனம் தயாரிக்கும் கார்களின் விலை, ஏப்.1  முதல் 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் அனைத்து வகையான ஆடம்பர கார்களின் விலை 3.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.

அனைத்து வகையான மெர்சிடீஸ் பென்ஸ் கார்களின் விலை 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனத்தின் கார்களின் விலை 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன.

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் சரக்கு வாகனங்கள் விலை 2 முதல் 2.5 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களின் விலை, 2021இல் 9 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஏப். 1 முதல் 6 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஹீரோ மோடோகார்ப் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விலை, ஏப். 5 முதல் 2,000 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்