அடுத்த கல்வியாண்டிலும் ஆன் லைன் வகுப்புகள்

பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலும் ஆன்-லைன் வழியில் வகுப்புகள் நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு அனுமதி அளித்துள்ளது.
x
பொறியியல் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டிலும் ஆன்-லைன் வழியில் வகுப்புகள் நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு அனுமதி அளித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாதத்தில் முதற்கட்ட கலந்தாய்வை தொடங்கி, இறுதிகட்ட கலந்தாய்வை, ஜூலை 20 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும், கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்களை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு மாணவர்களை சேர்க்கக்கூடாது என்றும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று முழுமையாக விடைபெறாத நிலையில் அடுத்த கல்வியாண்டிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு அனுமதி அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்