'கோயில்கள் முன்பு இஸ்லாமியர்கள் கடை போட கூடாது' அறிவிப்பு பலகையால் கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடகாவில் கோயில்கள் முன்பு இஸ்லாமியர்கள் கடை போடக் கூடாது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
கர்நாடகாவில் கோயில்கள் முன்பு இஸ்லாமியர்கள் கடை போடக் கூடாது என கோயில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மங்களூருவில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோயில் நுழைவாயில் முன்பு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த, அறிவிப்பு பலகையில் ஹிஜாப் தீர்ப்பை மதிக்காத இஸ்லாமியர்கள் யாரும் இந்து கோயில்கள் முன்பு கடையை போட்டு வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மங்களூர் அருகே புத்தூர் பகுதியில் அமைந்துள்ள மகாலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் கடை ஏலத்தில் இஸ்லாமியர்கள் யாரும் பங்கேற்க கூடாது என செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தியிருந்தது சர்ச்சையான நிலையில் தற்போது துர்கா பரமேஸ்வரி கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்