#BREAKING|| புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் - உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதம்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான பிரச்னைக்கு புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதிட்டுள்ளது.
x
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான பிரச்னைக்கு புதிய அணையே நிரந்தர தீர்வாக அமையும் என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வாதிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் தொடங்கியது. கேரள அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா முன்வைத்த வாதங்கள் வருமாறு: முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்கும் அளவை அதிகரிக்க மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு அளித்த பரிந்துரை விவாதமாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு அதில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்துள்ளது. அணையில் அதிக அளவிலான நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் நீர் பங்கீடு தொடர்புடையதல்ல. அணை பாதுகாப்பு தொடர்புடையது. தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த தொழில் நுட்பம் சார்ந்த உறுப்பினர்களை கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும். இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காண புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடாகவுள்ளது. ஆனால் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என வாதிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்