சமக்ர சிக்சா அபியான் திட்டம் குறித்து டி.ஆர்.பாலு கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர்
உள்ளூர் மொழி கல்வி அமைப்பை ஊக்கப்படுத்துவது சமக்ர சிக்சா அபியான் திட்டத்தின் முதன்மை நோக்கம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, சமக்ர சிக்சா அபியான் திட்டத்தை தாய்மொழியில் கொண்டுவரும் திட்டம் உள்ளதா என திமுக எம்பி டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார். இந்த திட்டத்திற்கு தங்களின் சொந்த பாடத்திட்டம் மற்றும் சொந்த மொழிகளை மாநில அரசுகள் தேர்வு செய்து கொள்ளலாம் என தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். உள்ளூர் மொழி கல்வியமைப்பை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் என தெரிவித்த அவர், இந்த திட்டத்தின் மூலம் டிஜிட்டல் நூலகம், ஸ்மார்ட் வகுப்பறை போன்றவற்றை உள்ளூர் மொழிகளிலேயே ஏற்படுத்திக் கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
Next Story