ஆஸ்திரேலியாவில் இருந்து பழங்கால சிலைகள் மீட்பு - பிரதமர் மோடி நேரில் ஆய்வு

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியாவை சேர்ந்த 29 வகையான பழங்கால சிலை மற்றும் பொருட்களை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.
x
9வது நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள்,  மணற்கல், வெண்கலம், பித்தளை
பொருட்கள் உள்ளிட்டவை ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்தடைந்தன. இவை ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழகம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களை சேர்ந்தவை. ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்த இவற்றை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இதோடு, இன்று இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் பங்கேற்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்