பாரம் தாங்காமல் சரிந்த கேலரி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி

கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள காளிகாவு பூங்கோட்டில் அகில இந்திய செவன்ஸ் கால்பந்து இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற இருந்த நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 2500 பார்வையாளர்கள் அமரும் வகையில் மூங்கில்களால் தற்காலிக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.
x
கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள காளிகாவு பூங்கோட்டில் அகில இந்திய செவன்ஸ் கால்பந்து இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற இருந்த நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 2500 பார்வையாளர்கள் அமரும் வகையில் மூங்கில்களால் தற்காலிக கேலரி அமைக்கப்பட்டிருந்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்த மூங்கில் கேலரியின் ஒரு பகுதி பாரம் தங்காமல் இடிந்து விழுந்த நிலையில் சுமார் ஐம்பது பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நேற்று அதிகாலை முதலே பெய்த மழையின் காரணமாக மண் இலகுவாக மாறியதால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த மக்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கேலரி சரிந்து விழுந்த நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்