"அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு" - ஒரிரு நாட்களில் இடைக்கால உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசாணை விவகாரத்தில் ஓரிரு நாட்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
x
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசாணை விவகாரத்தில் ஓரிரு நாட்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் உள்ளிட்ட ஐந்து பேர் சார்பில் தாக்கல் செய்த ரிட் மனுவில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான தமிழக அரசாணை அரசமைப்பு சட்டத்துக்கு முரணானது எனவும், அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமால் நடப்பாண்டு முதுநிலை மருத்துவ படிப்புக்களுக்கான சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசு மருத்துவர்களுக்கு நடப்பாண்டு இட ஒதுக்கீடு அளிக்காமல் கலந்தாய்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில், ஒரிரு நாட்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்