"12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி" - மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில்

2019 முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 12 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்று இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
x
2019 முதல் 2021ம் ஆண்டு வரை சுமார் 12 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்று இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பாஜக எம்.பி ஹரீஸ் திவேதியின் கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து உள்ளார். அதில் 2019ம் ஆண்டு 5 லட்சத்து 87 ஆயிரத்து 93 இந்திய மாணவர்களும், 2020ம் ஆண்டு 2 லட்சத்து 60 ஆயிரத்து 312 மாணவர்களும் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி பயில சென்று இருப்பதாக கூறியுள்ளார். 2021ம் ஆண்டில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 498 இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில பல்வேறு நாடுகளுக்கு சென்று உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்