முதுநிலை மருத்துவம் - நீட் கட் ஆஃப் குறைப்பு !

முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்ணை 15 சதவிகிதம் வரை தேசிய தேர்வுகள் வாரியம் குறைத்துள்ளது.
x
முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்ணை 15 சதவிகிதம் வரை தேசிய தேர்வுகள் வாரியம் குறைத்துள்ளது. 


பல்வேறு மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர் அமைப்பான FAIMA உள்ளிட்டோரின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 50% இருந்து 35% மாகவும், பட்டியல் இனத்தவர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 40% இருந்து 25% மாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

புதிய கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட முடிவுகளை வெளியிட்டு அது குறித்த தரவுகளை அனுப்பும்படி சுகாதார சேவைக்கான பொது இயக்குனரகம் தேசிய தேர்வு வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. 

கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது மூலம் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அதிக அளவிலான மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்