அந்த மர்ம சாமியாரே இவர் தானா? தேசிய பங்கு சந்தையில் இப்படி ஒரு மோசடி!

தேசிய பங்கு சந்தை மோசடி வழக்கில் கைதான முன்னாள் என்எஸ்இ குழும அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
x
தேசிய பங்கு சந்தை மோசடி வழக்கில் கைதான முன்னாள் என்எஸ்இ குழும அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதோடு, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மர்ம சாமியாரே சுப்பிரமணியன் தான் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இமய மலையில் உள்ள ஒரு சாமியாரின் பேச்சை கேட்டு தேசிய பங்கு சந்தையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்த மோசடி வழக்கில் தேசிய பங்கு சந்தையில் முன்னாள் குழும அதிகாரி ஆனந்த் சுப்பிரமணியன் மற்றும் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர். 

ஆனந்த் சுப்பிரமணியனின் நியமனமே முறைகேடாக நடைபெற்றதாக சித்ரா ராமகிருஷ்ணன், மீது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம்சாட்டியிருந்தது. 

விசாரணையில் சாமியார் ஒருவர் சித்ரா ராமகிருஷ்ணனை இ-மெயில் மூலம் வழிநடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த இ-மெயில் ஐடியை சுப்பிரமணியன் அல்லது அவரது கூட்டாளிகள் தான் உருவாகியிருக்க வேண்டும் என சந்தேகிப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 

சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது, சீசெல்சு தீவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக மர்ம சாமியாரிடம் இருந்து சித்ரா ராமகிருஷ்ணனுக்கு இ-மெயிலில் தகவல் வந்ததாகவும், 

பின்னர் சீசெல்சு தீவுக்கு சித்ரா ராமகிருஷ்ணனும், ஆனந்த் சுப்பிரமணியனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும் சிபிஐ சுட்டி காட்டியுள்ளது. 

இதனால் மர்ம சாமியாராக சுப்பிரமணியன் தான் ஆள்மாறாட்டம் செய்திருக்க கூடும் என்று தெரிவித்துள்ள சிபிஐ, அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

தற்போது நீதிமன்ற காவலில் சுப்பிரமணியன் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ தரப்பு வாதங்களை கேட்ட சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவின் தீர்ப்பை  ஒத்தி வைத்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்