பகுஜன் சமாஜ் பாஜகவின் பி - டீமா? - மாயாவதி விளக்கம்

பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவின் பி-டீம் என எதிர்மறையாக பிரசாரம் செய்யப்பட்டது, தேர்தலில் மக்களைத் தவறாக வழிநடத்திவிட்டதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.
x
பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவின் பி-டீம் என எதிர்மறையாக பிரசாரம் செய்யப்பட்டது, தேர்தலில் மக்களைத் தவறாக வழிநடத்திவிட்டதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறி உள்ளார். தேர்தல் தோல்வி குறித்து லக்னோவில் பேசிய அவர், பகுஜன் சமாஜ், பாஜகவின் பி-டீம் அல்ல என்றும், அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் தாங்கள் மாறுபட்டவர்கள் என்றும் கூறினார். தேர்தல் தோல்வியால் சுணங்கிவிட மாட்டோம் எனக் கூறிய மாயாவதி, தோல்வியிலிருந்து பாடம் கற்று மீண்டும் ஆட்சிக்கும் வருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்