5 மாநில தேர்தல் - அபார வெற்றிகளும் அதிர்ச்சி தோல்விகளும்!

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் சில முக்கிய வேட்பாளர்களையும் அவர்கள் பெற்ற வெற்றி தோல்விகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
x
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தன்னை எதிர்த்து களம் கண்ட சமாஜ்வாதி கட்சியின் சுபவதி உபேந்திர தத் சுக்லாவை தோற்கடித்தார். கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எஸ்.பி.சிங் பாகெலை எளிதில் வீழ்த்தினார். உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் மவுரியா, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பல்லவி பட்டேலிடம் தோல்வியை தழுவினார். பஞ்சாப்பின் ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளரான பக்வந்த் மன், தான் போட்டியிட்ட தூரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தல்வீர் சிங்கை வீழ்த்தினார். பஞ்சாப் முதலமைச்சர் சரண் ஜித் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சரண்ஜித்திடமும், பதாவுர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் லப் சிங்கிடம் என தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார் பஞ்சாப் காங்கிரஸ் கட்சி தலைவர் நவ்ஜோத்சிங் சித்து கிழக்கு அம்ரித்சர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் JEEVAN JYOT KAUR-ரிடம் தோல்வியைத் தழுவினார். முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் ஆம் ஆத்மி வேட்பாளர் அஜித் பால் சிங் கோலியிடம் வீழ்ந்தார் உத்தர்கான்ட் மாநிலத்தில் பா.ஜ.க பெரும்பான்மையை கைப்பற்றினாலும் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, தன போட்டியிட்ட Khatima தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். உத்தர்கான்ட்டின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான Harish Rawat, தான் போட்டியிட்ட Lalkuwa தொகுதியில் பாஜக வேட்பாளர் Dr. Mohan Singh Bisht இடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கோவாவில் சான்குலிம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பிரமோத் சாவந்த், 666 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷை வீழ்த்தினார். மணிப்பூர் முதலமைச்சர் நோங்தொமம் பிரேன் சிங், தான் போட்டியிட்ட Heingang தொகுதியில், தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றியை ருசித்தார்.


Next Story

மேலும் செய்திகள்